உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பெண் உடுமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா பக்கம் சென்றபோது பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டார். இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் உடுமலை காவல்நிலைய தலைமை காவலர் திரு.சிவக்குமார் அவர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது ரவுண்டானா அருகே கிடந்த பணப்பையை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். தலைமை காவலரின் துரிதமான நடவடிக்கையினால் தவறவிட்ட பணம் உடனடியாக மீட்கப்பட்டதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.