உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி சாலவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆயுதங்களுடன் இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.அவர்களை சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்த தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த மும்பையை சேர்ந்த குலாம் கவுஸ் (வயது 25), சுனில் ராம் சால் பிரஜாபதி (25), ஆகாஷ் குப்தா (20) என்பது தெரியவந்தது.
சென்னை விமான நிலையத்துக்கு…
மேலும் அவர்களுடன் 3 பேர் வந்ததாகவும் அவர்கள் போலீசார் வந்தது தெரிந்தவுடன் சென்னை விமான நிலையத்துக்கு தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 79 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
மராட்டிய மாநிலத்தை சோ்ந்த 3 பேரை முக்கிய வழக்கில் விசாரிக்க வேண்டி உள்ளது. அவர்கள் மும்பைக்கு விமானத்தில் தப்பி செல்ல வந்து