சிறைத்துறையில், பதவி உயர்வுக்கான நேர் காணல்
தமிழக சிறைகளில் பணியாற்றும் முதல் நிலை காவலர், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர் காணல் மதுரையில் இன்றும், நாளையும் நடப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், பெண்கள் மாவட்ட சிறைகள் என மொத்தம் 185 சிறைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உதவி சிறை அலுவலர், சிறை அலுவலர், தலைமை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெறுகிறது, அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் மற்றும் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 40 துணை சிறை அலுவலர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் உதவி அலுவலர்களாக
கடந்த மாதம் நிரப்பப்பட்டது, இந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள சிறையில் பணியாற்றும் முதன்மை தலைமைக் காவலர்கள் பதவி உயர்வு மூலம் உதவி அலுவலர்களாக , முதல் நிலை காவலர்கள், முதன்மை தலைமை காவலர்களும் பதவி உயர்வு பெற உள்ளனர். இதற்காக மதுரை மத்திய சிறை வளாகத்தில் இன்றும் நாளையும் சிறைத்துறை டிஐஜிகள் தலைமையில் நேர்காணல் நடக்கிறது, இதில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு துப்பாக்கி கையாளுதல், சிறைநிர்வாகம், அணிவகுப்பு, கமாண்டிங், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய நான்கு பேர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள உள்ளனர், சீனியாரிட்டி அடைப்படையில் இந்த நேர்காணல் நடப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.