Police Department News

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர்

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர்

மதுரை மாநகர், திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் 19/10/2020 ம் தேதி அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருந்த போது, சுமார் இரவு 8 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, இரயில்வே நிலையம் எதிரே உள்ள பேரூந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நிலையப்பொறுப்பிலிருந்த த.கா.3626, கிருஷ்ணமூர்த்தியுடன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறி விட்டு, சென்று பார்த்த போது சுய நினைவு இல்லாமல் சோர்வாக இருந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு, அவர் தெளிவு பெற்ற பின் அவரின் பெயர், விலாசம் கேட்டபோது சிங்காரம் என்று தனது பெயரை மட்டும் கூறிவிட்டு மற்ற விபரங்கள் கூற வில்லை. இது சம்பந்தமாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி வரவழைத்ததில் மேற்கண்ட நபர் சுய நினைவில் இருந்ததால் 108 ஆம்புலன்சில் ஏற்றி செல்ல மறுத்து விட்டனர். தொடர்ந்து Red Cross க்கு தகவல் சொல்லியும் WhatsApp மூலமாக காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது, இதன் பயனாக மேற்கண்ட முதியவர் மதுரை புதூர் E1, காவல் நிலைய குற்ற எண். 2259/ 2020,வழக்கில் காணாமல் போன நபர் என்று தெரிய வந்தது. அதன் பின் E.1, புதூர் காவல் நிலையத்திலிருந்து, காவல் ஆய்வாளர் அவர்கள் நேரில் வந்து அழைத்து சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.