Police Department News

மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார்.

மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார்.

மதுரை மாநகர், செல்லூர் D 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி, களத்துப்பொட்டல், வ.உசி. தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செய்யது அலி மனைவி ஹபியா சல்மான் வயது 22/2020,
இவரது கணவர் செய்யது அலி ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது இவருக்கு இவரது பெற்றோர் 5 பவுன் நகை சீதனமாக போட்டுள்ளனர்.

தனது கணவரின் அம்மா சாராபீவி இறந்த பின் இவரது மாமனார் சாராபீவியின் தங்கை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். கணவரின் அக்கா தஜிதாபர்வின் மற்றும் இவரது கணவர் இருவரும் இவர்களது பராமரிப்பில் இருந்துள்ளனர். இவருக்கு திருமணம் முடிந்த பின்னர் தனது நகையை தனது பெற்றோரிடமே கொடுத்து ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நகையை திரும்ப வாங்கி வர சொல்லி மாமனார், மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர், ஆனாலும் இது தனது குடும்பப் பிரச்சனை என கருதி மிகவும் பொறுமையாக இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 15 ம் தேதி மதியம் சுமார் 1.15 மணியளவில் வ.உ.சி தெரு வழியாக இவர் நடந்து வரும் போது எதிரே இவரது மாமனார் அப்துல்லா, மாமியார் நிஷா, ஆகியோர் கையில் ஆசிட் பாட்டிலுடன் வந்தனர், அவர்களுடன் இவரது நாத்தனார் தஜிதாபர்வின், கொழுந்தனார் முகமதுஆசிக், ஆகிய இருவரும் வந்தனர். வந்தவர்கள் இவரை பார்த்ததும் நீ எப்படி 5 பவுன் நகையை வாங்காமல் இருக்கலாம் என கூறிக் கொண்டே இவரை இழுத்து கிழே தள்ளி விட்டு கைகளால் அடித்து இவர் மீது தான் கொண்டு வந்த ஆசிட்டை ஊற்றினர் உடனே வலி தாங்காமல் அலறவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது தாயார் காத்தூன் சரிபா அவர்களுக்கு சொல்லி, அவரின் உதவியுடன் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார் இவர் மருத்துவ மனையில் உள் நோயாளியாக இருந்தவாரே, காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி துரித நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.வினோத் குமார் அவர்கள் மேற்படி குற்றவாளிகளான அப்துல்லா, நிஷா, முகமது ஆசிக், தஜிதாபர்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.