Police Recruitment

மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை

மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் பாலத்தில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரை வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரியான திருமதி முத்துமொழி அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் மேற்படி நபரின் இறப்புப் பற்றி சட்டப்படியான விசாரணை நடத்தும்படி புகார் மனு அளித்ததின் அடிப்படையில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளர்.

காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், பைபாஸ் ரோடு,தீக்கதிர் அலுவலகம் எதிரில் உள்ள அய்யனார் காலனி 2 வது தெருவை சேர்ந்த Ex Army மாயாண்டி(லேட்) அவர்களின் மனைவி கல்யாணி என்பவர் கூறுகையில் இவர் கடந்த ஒரு வார காலமாக அந்த பகுதியில் நிர்வாணமாக திரிந்து வந்ததாகவும், யாரிடமும், எதுவும் கேட்க மாட்டார் என்றும், யாரும் எதுவும் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட மாட்டார் என்றும் ,அவர் மனநிலை பாதித்தவர் போல் அலைந்து திரிந்தார் என்றும் கூறினார், ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழையில் இவர் ரோட்டில் நனைந்த படியே திரிந்தார் என்றும், அதன் பின் அவர் இறந்து கிடந்த பாலத்தின் பக்கத்தின் கீழே இறங்க முயற்சித்து கீழே விழுந்து அவர் தலையில் லேசான காயம் ஏற்பட்டது எனவும் தெரிய வந்தது, மத சார்பான அடையாளங்கள், இவர் காது குத்தப்படவில்லை, கருப்பு நிறம் உடையவர், உயரம் சுமார் 160 செ. மீ, இருப்பார் அதன்பின் சட்டப்படி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் காவல் ஆய்வாளர் திரு. கோட்டைசாமி அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.