காக்கியின் கருணை உள்ளம் – வழித்தவறி வந்த மூதாட்டிக்கு உணவளித்து குடும்பத்தாரிடம் சேர்த்த காவலர்
திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய காவலர் திரு.கொம்பையா அவர்கள் 10.12.2020-ம் தேதியன்று மானூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியாக நின்றுக்கொண்டிருந்த வயதான மூதாட்டியிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரால் பதில் எதுவும் கூற முடியாத அளவிற்கு சோர்வான நிலையில் இருந்ததை அறிந்து அவருக்கு உணவு அளித்து அவரது பசியை போக்கி உள்ளார். பின்னர் எனது ஊர் தாழையூத்து அருகே பால்கட்டளை என்று கூறியதையடுத்து காவலர் அப்பகுதியில் விசாரணை செய்த போது மூதாட்டியின் மகன் தேடி வருவதை அறிந்தார். காவலர் அவரது மகனிடம் தொடர்பு கொண்டு மூதாட்டியை அவரது வீட்டிற்கே அழைத்து சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். காவலரின் இத்தகைய செயல் சக காவலர்களிடமும் பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. நமது போலீஸ் இ நியூஸ் சார்பாகவும் காவலருக்கு பாராட்டு தெரிவித்து கொள்ளுவதோடு, அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறுகிறது.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்