விருதுநகர் மாவட்டம்:-
திருவில்லி புத்தூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது…
திருவில்லிபுத்தூர் பகுதியில் பல திருட்டு சம்பவங்கள் நடந்துவந்த நிலையில்.
1.கோயில் உண்டியல் திருட்டு
2 . செல்போன் திருட்டு
3.செயின் பறிப்பு என
கடந்த வருடத்தின் 10 வது மாதம் திருவில்லி புத்தூரில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் மடவார்வளாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளது.
இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த கோவிலின் உள்ளே உள்ள உண்டியலை உடைப்பதற்கு கம்பியை கொண்டு திருட முயற்சித்த போது அங்கு இருந்த கோவில் பணியாற்றும் காவலர்களுக்கும் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கும் சந்தேகம் ஏற்படும்வகையில் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது திருட வந்த திருடன் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடிவிட்டான்.
பின்பு மறுநாள் திருவில்லிபுத்தூரில் தேரடி தெருவில் சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பற்றிக்க முயற்சி செய்யும் போது அந்த பெண் அய்யோ அம்மா என்று கத்தியவுடன் குற்றவாளி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டான்.
அதனைதொடர்ந்துகடந்த வருடம் இறுதியில் திருவில்லிபுத்தூரில் மஞ்சள்புதுர் தெருவில் விடியல் மகளிர் குழு செயல்பட்டு வந்தது அங்கே மூன்று செல்போன் திருடிவிட்டு சென்றுள்ளான்.
இந்த திருட்டை திருவில்லிபுத்தூர் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் மற்றும் நகர் காவல் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்கள் உத்தரவின்படி குற்றபிரிவு சார்பு ஆய்வாளர் திரு ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.
இதில் கோவிலில் கிடைத்த சிசிடிவி காட்சி மற்றும் செயின் பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் திருட்டு சிசிடிவி காட்சிகள் என மூன்றையும் ஆய்வு செய்ததில் ஒரே நபர் தான் என்பது தெரியவந்தது.
இம்மூன்று திருட்டில் தொடர்புடைய தேடப்படும் நபர் முதற்கட்ட விசாரணையில் உள்ளூரில் இல்லை என்பதை அறிந்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து இடைவிடாது மேலும் விசாரணையை துரிதப்படுத்தினர்.
வேறொரு மாவட்டத்தை சேர்ந்த நபராக இருக்குமோ என்ற கோணத்தில் ஆராய்ந்தனர் .
அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமான மாவட்ட எல்லையில் யார் யார் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர் என்பதை ஆராய்ந்தனர் .
அப்போது சந்தேகத்தினடிப்படையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நகர் குற்றபிரிவு காவல் துறையினர் பின்தெடர்ந்தனர்.
அதன்பிறகு அந்த நபரை அழைத்து வந்து விசாரித்த போது அந்த குற்றவாளி தான் செய்த மூன்று குற்றங்களை தாமாகவே முன்வந்து ஒப்புக் கொண்டான்.
மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இவர் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தனர்.
மேற்படி இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலியிலிருந்து திருவில்லிபுத்தூருக்கு வந்து நோட்டமிட்டு பின்னர் திருடுகிறான் என்பதை காவல் துறையினர் அறிந்தனர்.
இந்த குற்றவாளி திருநெல்வேலி மாவட்டம் என்பதும் இவனது பெயர் ரிமோக்சன் இவனது தந்தை பெயர் மனோகரன் என்பதை விசாரணையில் தெரிந்தது.
இதனை அடுத்து குற்றபிரிவு காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து குற்றப்பத்திரிகை பதியப்பட்டு அவரை நீதிமன்ற காவலுக்கு ஆஜர்படுத்தினர்.