Police Recruitment

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்.

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்.

காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் நடைபயணம் சென்றார்,அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

காரைக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். செயின் திருட்டில் ஈடுபட்டது தேவகோட்டை கைலாசபுரத்தை சேர்ந்த கணேசன்மகன் சீனிவாசன் 39, என்பது தெரியவந்தது. இவர் இரண்டு தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.