Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி பிரமிளா வயது 52, இவர் பழனியில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார், சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாக்ஷி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கடந்த 20ம் தேதி இவர் மூளைச்சாவு அடைந்தார். இதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இருப்பினும் பிரமிளாவின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், நன்றாக இயங்கின, உடலுறுப்பு தானம் பற்றி உறவினர்களிடம் டாக்டர்கள் எடுத்துரைத்தனர். அவர்களும் தானம் செய்ய சம்மதித்தனர். அரசின் அனுமதி பெறப்பட்டு 5 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் நன்றாக இயங்கிய உறுப்புகள் எடுக்கப்பட்டனர். ஒரு சிறுநீரகம், கல்லீரல், ஆகியவை மீனாச்சி மிஷன் மருத்துவமனையில் வெவ்வேறு நோயளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், இரு கண்கள் மதுரை அரவிந்து கண் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இருதயமும், நுரையீரலும் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவ மனையில் உள்ள ஒரு நோயாளிக்கு பொருத்த விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டன,

மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவ மனையிலிருந்து விமான நிலையத்திற்கு காரில் செல்ல அரை மணி நேரமாகும். ஆனால் மதுரை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் திரு. சுகுமாரன் அவர்கள் தலைமையில், உதவி கமிஷனர்கள் திரு. திருமலைக்குமார், திரு. மாரியப்பன் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், கனேஷ்ராம், சுரேஷ் ஆகியோர் ரிங்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கிரீன் காரிடர் வசதிகளை செய்து கொடுத்தனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்ரமணியன் 13 நிமிடத்தில் விமான நிலையத்தை அடைந்தார், ஆக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை 7 பேரின் புது வாழ்வுக்கு சமயத்தில் உதவியதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.