Police Department News

குற்றத்தண்டனையில் அபராதம் என்று ஒரு வாய்பு இருப்பது குற்றத்தை குறைக்க உதவுமா?

குற்றத்தண்டனையில் அபராதம் என்று ஒரு வாய்பு இருப்பது குற்றத்தை குறைக்க உதவுமா?

குற்ற தண்டனையில் அபராதம் என்னும் ஒரு வாய்ப்பு இருப்பது குற்றம் அதிகரிக்க உதவுகிறது தவிர எந்த விதத்திலும் குற்றத்தை தடுக்க / குறைக்க உதவவில்லை.

தண்டனையில் சிறை தண்டனை மட்டுமே இருக்க வேண்டும் அந்த சிறை தண்டனை தற்போது குறைந்தது ஒரு மாதம் என்ற அளவில் இருக்கிறது இந்த அளவை நீதிமன்றங்கள் தனது சுயவிருப்பத்தின் பேரில் ஒரு நாளாக கூட குறைத்து தீர்ப்புகள் வழங்கி வருகின்றன இது நீதிபதிகளின் சுயவிருப்பத்தின் பேரில் நடைபெறுகிறது.

சட்டத்திலேயே சிறு குற்றங்கள் அடுத்து அடுத்து பெரும் குற்றங்கள் என வகைப்படுத்தி அதற்கேற்ற படி ஒரு நாள் சிறை தண்டனையிலிருந்து குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அதிகப்படுத்தி சட்டம் இயற்றுவது குற்றம் குறைவதற்கான வழியாகும்

எந்தக் குற்றம் செய்தாலும் அபராதம் விதிப்பது குற்றம் செய்வோருக்கும் குற்றத்தை தடுக்கவேண்டியவருக்கும் ஊழல் செய்வதற்கு வழி வகுத்துத் தருகிறது என்றால் மிகை அல்ல இதனால்தான் சர்வசாதாரணமாக குற்றங்களைப் புரிந்து விட்டு பிடிபட்டால் அபராதம் விதிப்பதற்கு கையூட்டு அளித்து தப்பித்து விடுவது என்பது போல நடைமுறையில் உள்ளது. நீதித்துறை மாற்றம் கொண்டு வருமானால் சிறு குற்றம் புரிவோரும் திருந்தி வாழ வகை ஏற்படும். குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், முன்று தவனைகளும் இருக்கிறது.

இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு தவனைகளில் செலுத்தலாம்.
இப்படி செலுத்தாது போனால் மட்டுமே, சிறையில் அடைக்க முடியும். இப்படி அடைத்தப் பின்னுங்கூட, அபராதத்தை கட்டி விட்டு வெளியே வரலாம்.
இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 69 இன்படி, இதிலும் சிறப்பு என்றால், ரூ 500 அபராதத்துக்கு ஐந்து நாள் சிறைவாசம் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டால், ரூ 400 ஐக் கட்டினால் போதும் என சட்டம் சொல்லுகிறது. இவ்வாறு குற்றத்தண்டனைக்கு அபராதம் விதிப்பது, குற்றம் புரிந்தவருக்கு எந்த வகையிலும் கஷ்டத்தை தராமல் அவர்கள் மேலும் மேலும் குற்றம் செய்த்தான் தூண்டும்.குற்றத்திற்கு சிறைத்தண்டனைதான் நல்லது,

Leave a Reply

Your email address will not be published.