தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஆலோசனை கூட்டம்.
13.03.2021
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS., அவர்கள்
தலைமையில் கூடுதல் காவல் கண்பாணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடக்காத வண்ணம் ரோந்து பணி மேற்கொண்டு முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர்க்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.