Police Department News

DGP பணி மாற்றத்தில் அரசியல் வேண்டாம், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

DGP பணி மாற்றத்தில் அரசியல் வேண்டாம், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நமது ஜனநாயக நாட்டில் ஆட்சிகள் மாறிடும் பொழுதெல்லாம் அரசு அதிகாரிகள் இடம் மாற்றப்படுவதும், தலைமை செயலாளர் புதியதாக நியமிக்கப்படுவதும் வழக்கமாக நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் DGP எனப்படும் Director General of Police உயர்ந்த பட்ச காவல்துறை அதிகாரி நியமனத்திற்கென்று சில விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, சமீபத்தில் பஞ்சாப், அரியானா, கேரளா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் அரசுகள் சட்ட விதிகளை மாற்றி தாங்கள் சுயமாக DGP களை நியமனம் செய்து கொள்ள அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை பதிவு செய்திருந்தனர் . உண்மையில் DGP என்பவர் எப்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்கு சில விதி முறைகள் இருக்கின்றன. அதாவது தற்போது பதவியில் இருக்கும் DGP ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே UPSC தேர்வு குழு அனுபவம் வாய்ந்த சில காவல்துறை அதிகாரிகளின் பெயரை பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும், UPSC அந்த காவல்துறை அதிகாரிகளின் பட்டியலில் இருந்து குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த சிறப்பாக பணியாற்றிய மூத்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பிடும் அதன்பிறகுதான் அந்த மாநில அரசு DGP யை தேர்ந்தெடுக்க வேண்டும், இதுதான் தற்போது வரை கடைபிடித்து வரும் முறையாகும். இந்த விதியைத்தான் மாற்றி தாங்களை சுயமாக DGPகளை தேர்ந்தெடுத்து கொள்ள மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. ஆனால் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டால், தேவையில்லாத அரசியல் குறிக்கீடுகள் உறுவாகி DGP பதவியின் மேன்மைக்கே ஒரு களங்கம் உறுவாகிவிடும் DGP அதிகாரி சுயமாகவும், நேர்மையாகவும் பணிபுரிந்தாலும் பலவித சிக்கல்கள் ஏற்படும் எனவே அந்த மாநிலங்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து, அதிரடியான தீர்பை அளித்தது.

Leave a Reply

Your email address will not be published.