மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புஅதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுபாடுகள் நாளை முதல் அமுலுக்க வர உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து காவலர்கள் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் , போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்தால் 200/− ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அனைவரும் முககவசம் அணிந்து அரசுக்கு ஒத்துழைப்பு தரும்மாறும் கொரோனா வைரசிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டனர்.
.