ராமநாதபுரம் வனரேஞ்சருக்கு சுவிட்சர்லாந்தின் சர்வதேச விருது
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் மூலமாக ராமநாதபுர வனதுறை ரேஞ்சர் சதீஸ் சேவையை பாராட்டி சரவதேச விருது வழங்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 10 வனத்துறை ரேஞ்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சர்வ தேச விருது வழங்குகிறது.100 நாடுகளிலிருந்து 600 க்கும் மேற்பட்ட வன ரேஞ்சர்கள் வின்னப்பித்திருந்தனர். அதில் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா தேசிய பூங்கா பகுதியில் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், அலையாத்திதி காடுகளை பாதுகாக்கவும் சிறப்பாக பணிபுரிந்த ராமநாதபுர வன ரேஞ்சர் சதீஸ் அவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின நிறுவனத்தில் அறிவியல் விஞ்ஞானி சிவக்குமார் சுவிர்ட்ச்சலாந்தின் சர்வதேச விருதுக்கு பரிந்துரைத்தார். கொரோனா தொற்றின் காரணமாக சுவிட்சரலாந்தில் நடக்கவிருந்த விருது வழங்கும் விழா நேற்று முன் தினம்( 7/4/21) இணையதளத்தில் நடந்தது. இதில் ரேஞ்சர் சதீஸுக்கு சேவ் தி ஸ்பீஸீஸ் என்ற பிரிவின் கீழ் சீருடையில் அணிந்து கொள்ள பிரத்தியேக பேட்ஜ் , ரூபாய் 7.25 லட்சம் மதிப்பிலான (USS டாலர் 10,000/−)பரிசு தொகை வழங்கப்பட்டது.
விருது பெற்ற வன ரேஞ்சர் சதீஸை வனத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் பாராட்டினர்.