மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே […]
Author: policeenews
கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு.
கொரோனா நடவடிக்கைகள் பற்றி அவதூறாக பேசிய நபர்கள் மீது வழக்கு. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் டில்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அதனடிப்படையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு இராமநாதபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வந்தனர். அவருக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என வந்துள்ளது. இருப்பினும் 14 நாட்கள் தனிமை படுத்த வேண்டிய நிலையில் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ளார். இரண்டாவது முறையாக இரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உள்ளதாக தெரியவந்த […]
காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர்
காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகள் மூடி இருக்கும் நிலையில் இறைச்சிக் கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என்ற […]
திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது
திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. உடன் தலைமை காவலர்கள் திரு. தண்டபாணி திரு. ராஜ்குமார் திரு.பால் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் செயலை செய்த காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். போலீஸ் இ நியூஸ் மு. […]
காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…!
காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…! கரோனா பணியில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கடைகளில் மாமூல் கேட்டு வாங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஸ்ரீபிரியாவுக்கு சீர்காழி பகுதியில் கரோனா பாதித்தவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் […]
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக கருகம்பத்தூர், சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி
ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வரைவோலையை இன்று 17/04/2020 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களிடம் வழங்கினார். இவரது நற்செயலை கண்டு காவலர் சமூகம் மற்றும் அனைத்து குழுக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!
பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…! கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டெப்ட்டி காமண்டன்ட் மீது வழக்குப்பதிவு செய்யபட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் ஊர்காவல்படை வீரர்கள் மற்றும் ஐ ஆர் பி என் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் […]
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார். 17:04:2020)திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கையுறைகள் & மற்றும் கபசுரகுடிநீர் வழங்க்கினார்கள். அதை ஊர்க்காவல்படை வீரர் ஜேசு தனபால் அதை பெற்றுக் கொண்டார் உடன் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.அழகப்பன் இருந்தார். போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் செய்தியாளர்.
ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு
ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு. இன்று காலை 7 மணி முதல் காவல் நிலையத்தில் ஊரடங்கின் போது பிடிக்கப்பட்ட 2 சக்கர வாகனங்களை உரிய நபர்கள் உரிய அசல் ஆவண நகல்களுடனும் ஜாமினுக்கு ஒரு நபர் ஆதாருடனும் வந்து வாகனங்களை – உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளளாம்.










