Police Department News

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிகிறது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்கா பெரு நெருப்பாக மாறி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. ரசாயன பொருள் எரிவதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. அதே நேரம் நுரை கொண்டு அணைக்க முயன்றும் தீ அணையவில்லை. கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீ கட்டுக்கடங்கவில்லை. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பக்கத்திலுள்ள ஆவடி பகுதிகளுக்கும் புகை பரவியுள்ளது. பொதுமக்கள் சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீப்பிடித்த பகுதிக்கு வேடிக்கைப்பார்க்க பொதுமக்கள் வரவேண்டாம் என போலீஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர். போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி தனது உயர் அதிகாரிகளுடன் தானே நேரடியாக தீயை அணைத்து மீட்ப்புபணியில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தீவிபத்து குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “மருந்து தயாரிக்கும் கெமிக்கல் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம் பக்கம் பொதுமக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை. புகை காற்றில் பரவுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தகவல் எதுவுமில்லை. மருந்துப்பொருள் என்பதால் ஆபத்தில்லை என்றே நினைக்கிறேன். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விதமான நுரைகளும் இந்த தீயணைப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மூன்றுப்பக்கமும் சூழ்ந்து அணைத்து வருகிறோம், ஒருபக்கம் மட்டும் செல்ல முடியவில்லை. அங்கும் வீரர்கள் சென்றுள்ளனர். மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லாரிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர், மேலும் 500 தீயணைப்பு அதிகாரிகள் வர உள்ளனர். ஓரிரு மணி நேரத்தில் அணைத்துவிடுவோம். தற்போது அனைத்துவிதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தீயை அணைப்பதாலும், மருந்துப்பொருளின் தன்மையாலும் புகை அதிகமாக வருகிறது. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். தீ பற்றி எரிந்த இடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் அகற்றப்பட்டுவிட்டனர். காவல் ஆணையர் உயர் அதிகாரிகள் இங்கு நேரில் பார்வையிட்டு வருகின்றனர்”. இவ்வாறு தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பற்றிய தீ பெரிய அளவில் கட்டுக்கடங்காமல் எரிகிறது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பொதுமக்கள் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மருந்துப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலையில் மாலை 3.30 மணி அளவில் பற்றிய தீ நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்கா பெரு நெருப்பாக மாறி எரிந்து வருகிறது. ஆரம்பத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை அணைக்க முடியவில்லை. ரசாயன பொருள் […]

Police Department News

எலியட்ஸ் பீச்சில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு : கடத்தல் கும்பல் பிடிபட்ட சுவாரஸ்ய நிகழ்வு: சிசிடிவி கேமராவின் சிறப்பான உதவி

பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் உறங்கிய 8 மாத கைக்குழந்தையை கடத்திய கும்பல் ரூ.2.25 லட்சத்துக்கு விற்றது. குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். ஆரம்பம் முதல் குழந்தையை வாங்கியவர் வீடுவரை 3 வது கண்ணான சிசிடிவி கேமரா உதவியால் சாதிக்க முடிந்தது. காணாமல்போன குழந்தை பதறிய தாய் கடந்த 28- ம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் ஸ்கேட்டிங் மைதானத்தில் கும்பகோணத்தை […]

Police Department News

*பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக காவலர்கள்!

*பெண் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சக காவலர்கள்!! கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலர் திருமதி. மலர்விழி அவர்களுக்கு ஆய்வாளர் திருமதி. அன்னம் அவர்கள் தலைமையில் சக காவலர்களோடு சேர்ந்து இன்று (28.02.2020) வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Police Department News

பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார். 26.02.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் , சென்னீர்குப்பம், ஆவடி ரோடு, SA பொறியியல் கல்லூரி அருகில் T-12 பூந்தமல்லி காவல் நிலைய அதிகாரிகள் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற TN14 U 0398 என்ற ஆட்டோ […]

Police Department News

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள்.

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள். ஊர்க்காவல் படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக சீரும் சிறப்புமாக பணிபுரிந்து இன்று 29.02.2020. பணி ஓய்வு பெறும் நமது படைப்பிரிவு தளபதி திரு. நா. வேலுச்சாமி ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறோம்… அவர்களுக்கு எழுதிய ஒரு சில வரிகள். இதோ என் எண்ணோட்டத்தினை எழுத்துகளின் வாயிலாக……. எளிமை, நேர்மை, உண்மை இவை வெறும் வார்த்தைகள் அன்று – நீவீர் […]

Police Department News

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் அதிகாரிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்களை இன்று (27.02.2020) தலைமைச் செயலகத்தில்¸ காவல்துறை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு. சுனில் குமார்¸ இ.கா.ப.¸ திரு. சுனில் குமார் சிங்¸ இ.கா.ப.¸ ஆகியோரும்¸ காவல்துறை கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்ற திரு.ச.நா. சேஷசாய்¸ இ.கா.ப.¸ திரு. எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம்¸ இ.கா.ப.¸ ஆகியோரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

Police Department News

திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொந்தரவு

திருப்பூர் மாநகர பங்களா ஸ்டாப் அருகே  வாகனத்தில் அடிபட்டு ரோட்டில் இறந்து கிடந்த நாய்யை வாகன ஒட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும்  தொந்தரவு ஏற்படாதவாறு  ஆயுதப்படை காவலர்  968 வினோத் மற்றும் காவலர்  215 சங்கீத் கண்ணன் ஆகிய இருவரும் அப்புறப்படுத்தி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருவரையும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்… போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]

Police Department News

சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்

சாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள், டெல்லி போலீஸ் அதிர்ச்சி…!! பலி எண்ணிக்கை உயரும் அபாயம்…! டெல்லி: டெல்லியில், கலவரத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், சாக்கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல உடல்கள் இப்படி, கிடக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். கலவரத்தில் இஸ்லாமியர்களுக்கு அரணாக நின்ற தலித்துகள்,சீக்கியர்கள். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும், டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக […]

Police Department News

நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு.

நேர்மையாக நடந்து கொண்ட வாகன ஓட்டுனர் மணிகண்டனுக்கு குவியும் பாராட்டு. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாடகை வாகன ஓட்டுநராக பணிபுரிபவர் மணிகண்டன். இவர், 26.02.2020-ம் தேதி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஆட்களை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டு வீடு திரும்பிய நிலையில், தான் சென்ற வாகனத்தில் கேட்பாரற்று கிடந்த ஏழரை பவுன் தங்கச்சங்கிலியை பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வி. சாரதா அவர்களிடம் ஒப்படைத்தார். பரமக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் […]

Police Department News

சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள்.

சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் 27.02.2020 , தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி Dr. சைலேந்திர பாபு IPS அவர்கள் மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆய்வுக்காக வந்திருந்தார். பின்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மகாராஜா என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு தென்மண்டலம் 8 மாவட்டங்களை […]