_*வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது*_
_திருப்பூர் மாநகரில் தனியாக செல்லும் நபரிடம் மர்ம ஆசாமிகள் மிரட்டி செல்போன்களை பறித்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் *உயர்திரு.சஞ்சய்குமார் (இ கா ப)* அவர்களின் உத்தரவின் பெயரில் மாநகர துணை ஆணையர் *உயர்திரு.வெ.பத்ரிநாராயணன் (இ கா ப)* அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகர வடக்கு உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்களின் மேற்பார்வையில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் திரு.முருகையன் தலைமையில் முதல் நிலை காவலர் நல்லசாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட போலீசார் காவிலிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரம் அடுத்த ராஜீவ் நகரை சேர்ந்த இளையராஜா என்கிற வினோ (20) தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கோவில் வீதியைச் சேர்ந்த தம்பு என்கின்ற தம்பிரான் (20) என்பது தெரியவந்தது
