டிக் டாக்கில் ஆபாச விடியோ
வாலிபர் கைது..!!
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (19). தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், டிக் டாக்கில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார், இன்று கண்ணனை கைது செய்தனர்.