பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் சரகம் கொடைவலாகம் மதுகடிப்பட்டு அருகே அருகே மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படை பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தரங்கம்பாடி கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் […]
Author: policeenews
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…!
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…! சாலையில் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது வலது புறமாக முந்திச்செல்ல வேண்டும். வாகனத்தை முந்துவதற்கு முன்பாக தங்களுக்கு பின்னால் வரும் வாகனத்திற்கு சுட்டிக்காட்டி (indicator) அதன் பின்னர் முந்திச்செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது அந்த வாகனத்திற்கு முன்பு போதிய இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். வாகனத்தை முந்தும்போது ஒருபோதும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகளின் அறிவிப்புகளை ஒருபோதும் காணத்தவறக்கூடாது. சாலையில் […]
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த உதவி ஆய்வாளர்
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த உதவி ஆய்வாளர். பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரின் தந்தை இறந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பை இடையிலே விட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மாணவனிடம் கல்வியின் சிறப்பினை எடுத்துக் கூறி அம்மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் […]
விஜய், அன்புச்செழியன் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைப்பு
நடிகர் விஜய் நடித்திருந்த ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய், பிகில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 3 பேருக்கும் வருமானவரித் துறை சார்பில் […]
2 ஆண்டுகளாக துப்பு கிடைக்காமல் இருந்த தம்பதி கொலை வழக்கில் 2 இளைஞர்கள் கைது- ஒருவர் தன் சகோதரரை கொலை செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது
திருச்சி அருகே தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரமேஷ்(35). விவசாயியான இவர், ஊரிலிருந்து சற்று தொலைவில் வீடு கட்டி மனைவி லதாவுடன்(33) வசித்து வந்தார். கடந்த 23.4.2018-ம் தேதி இரவு ரமேஷூம், லதாவும் வீட்டின் வாசலில் படுத்திருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த […]
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த டாக்டர் ஆபாஷ்குமார் ஐபிஎஸ் அவர்களை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் திரு சுனில் குமார் சிங் அவர்களை சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டது
சென்னை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு
சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ளகுற்ற வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு,செயின் பறிப்பு, ஆள் கடத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தற்போது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு […]
போதை பொருள் விற்பனை செய்தவர்கள் கைது…!!
போதை பொருள் விற்பனை செய்தவர்கள் கைது…!! கல்லூரி மாணவர்கள், நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் 300 ஸ்டாம்ப் வடிவிலான போதை, 50 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி
மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை சுமந்து சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், IPS. அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணாசிங், IPS. அவர்கள்.
சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது
சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின்படி தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் 22/02/2020 அன்று தூத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் […]










