தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் இருந்து பணி நிறைவு பெற்ற திரு. நா. வேலுச்சாமி அவர்கள்.
ஊர்க்காவல் படையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 25 வருடங்களாக சீரும் சிறப்புமாக பணிபுரிந்து இன்று 29.02.2020. பணி ஓய்வு பெறும் நமது படைப்பிரிவு தளபதி திரு. நா. வேலுச்சாமி ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறோம்…
அவர்களுக்கு எழுதிய ஒரு சில வரிகள். இதோ என் எண்ணோட்டத்தினை எழுத்துகளின் வாயிலாக…….
எளிமை, நேர்மை, உண்மை
இவை வெறும் வார்த்தைகள் அன்று – நீவீர்
வாழ்ந்துக் காட்டிய வாழ்க்கை நெறிகள்.!!!
பணிகள் செய்ய நீங்கள் சளைத்ததும் இல்லை
என்றும் களைத்ததும் இல்லை
தெரியாத ஒன்றை அறிய முயல்வீர்!
தெரிந்த ஒன்றை பிறருக்கு புரிய வைக்க முயல்வீர்!!
உங்களிடம் சற்றே வேகம் குறைவு – ஆம்
மறுப்பதற்கு அன்று
பேச்சில் மட்டுமே தவிர செயலில் அன்று..!!
உங்கள் திறமையைக் கண்டு
வியந்து கொடுத்தார்கள்
பணி ஓய்வு – ஆம்
உங்கள் சிறப்பான பணியை ஓரிடத்தில்
சிக்குண்டு கிடக்காமல் சிறகடித்து பறக்க
எண்ணி மனம் நிறைந்து கொடுத்தார்கள்
பணி நிறவைு என்ற பாசத்தால்…
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.