Police Department News

பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பிஸ்கெட், கேக் தயாரித்த பிஹார் இளைஞர் கைது

பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக பிஸ்கெட், கேக் தயாரித்து விற்பனை செய்த பிஹார் இளைஞர் கைது செய்யப்பட்டார். பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் பிஸ்கெட், ரஸ்க், கேக் உள்ளிட்டவைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த தனிப்பிரிவின் டிஎஸ்பி நீதிராஜன், ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். கொளத்தூர், புத்தகரம், ஜெயலட்சுமி […]

Police Department News

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கம் சிக்கியது: மலேசியாவிலிருந்து நூதன முறையில் கடத்திய 3 பேர் கைது

கார்கோ பார்சல் மூலம் மலேசியாவிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 10.5 கிலோ தங்கத்தை கடத்திய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னையில் ஏர் கார்கோ பகுதியில் நடத்திய சோதனையில் இரண்டு பேர் சிக்கினர். அவர்கள் பெங்களூரிலிருந்து வந்த பார்சலை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சல் பெட்டியைப் பிரித்தபோது […]

Police Department News

புத்தாண்டு தினத்தில் அமைதியை காக்க காவல்துறையினர் நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் சிறப்பு வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன தணிக்கையில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதி வேகத்தை அளவிட்டு காட்டும் கருவி ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், […]

Police Department News

மதுரையில் போலி மது பாட்டில்கள் தயார்செய்தவர் கைது

மதுரை: 27.12.2017 D1 – தல்லாகுளம் ச&ஒ காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அழகுமுத்து, தலைமை காவலர் (626) திரு.செந்தில் குமார், முதல் நிலை காவலர் (1204) திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது தபால்தந்திநகர், மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள பெட்டிகடை அருகில் கட்டைப்பையுடன் நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 5 மது பாட்டில்கள் (750 ஆடு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் லிங்கனாண்டி (60) என […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

மதுரை: மதுரையில் 27.12.2017 ம் தேதி இரவு ஊ5 கரிமேடு சரூஒ காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி தனது ரோந்து காவலர்களுடன் சென்று ராஜாங்கம் வயது (70) மதுரை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 1. 200 kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

Police Department News

பல இடங்களாக கஞ்சா வற்பனை செய்தவர்கள் தூத்துக்குடி காவல்துறையினரிடம் சிக்கினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், ஆய்வாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் […]

Police Department News

பிரபல கொள்ளையன் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். […]

Police Department News

காவல்துறையில் 6140 காலிப்பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது?- தேர்வுத்துறை விளக்கம்

தமிழக காவல்துறையில் 6140 புதிய காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் முறைப்பற்றி சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம். காவல்துறையில் ஆயுதப்படையில் காலியாகவுள்ள 5538 இரண்டாம் நிலைக் காவலர்கள் ( grade-2 constable) (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்). சிறைத்துறையில் காலியாகவுள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் […]