விருதுநகர் மாவட்டம்:-
மக்கள் பணியில் நற்பணியாற்றும் காவல் ஆய்வாளர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறை உட்கோட்டம் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு சுபகுமார் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்சியானது காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது
இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக வத்திராயிருப்பு நகரம் முழுவதும் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்கள் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மேலும் முகாமிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் நலன்கருதி எடுத்த நற்ச்செயலை கருத்தில்கொண்டு செயல்பட்ட காவல் ஆய்வாளர் திரு. சுபகுமார் அவர்களுக்கும் உடன் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர் மற்றும் காவலருக்கு நன்றியை பொதுமக்கள் தெரிவித்தார்கள்.
விரைவில் இதுபோன்ற பல இடங்களில் காவல்துறை மற்றும் மருத்துவத் துறையுடன் இணைந்து சேவை செய்ய உள்ளதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில் சுமார் 230 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.