சென்னை பெருநகர செய்திகள்:-
பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே கை மாற்றுவதற்காக வைத்திருந்த 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலிசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் பகுதியில் அதிகளவு கஞ்சா கை மாறுவதாக தி.நகரில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே 2 நபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர், சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களது கை பையை சோதனை செய்து பார்த்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த இரண்டு நபர்களையும் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த இரண்டு நபர்களிடம் பல்லாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் முதற்கட்ட விசாரணையில் அந்த இரண்டு நபர்கள் திருப்பூரைச் சேர்ந்த அக்தர் உசேன் (26),
ஜாபர் அலி (24) என தெரியவந்தது.
அவர்கள் 22 கிலோ கஞ்சாவை கை மாற்றம் செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது .
இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.