
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர் மீது தாக்குதல்
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோலஜி முதுநிலை இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் நேற்று இரவு தியேட்டரில் படம் பார்த்து விட்டு கல்லூரி விடுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த இளநிலை மருத்துவம் 4-ம் ஆண்டு படித்து வரும் 10 மாணவர்கள் சேர்ந்து அவரை தாக்கினர்.
இதில் முதுநிலை மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பேராசிரியை ஒருவருடன் தியேட்டருக்கு சென்று விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
