Police Department News

வத்திராயிருப்பு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்:-

வத்திராயிருப்பு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வத்ராப் காவல்துறை ஆய்வாளர் சுபகுமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அனேக இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து அதனை தொடர்ந்து வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் பணி துரித படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கலையரங்கத்தில் வத்திராயிருப்பு காவல்துறை ஆய்வாளர் சுபகுமார் தலைமையில் கொரோனா தடுப்புசி பொதுமக்களுக்கு போடப்பட்டது .

இதில் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

மேலும் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
வத்திராயிருப்பில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முக கவசம் அணிய அவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடுத்து 10 நாட்களில் வருகின்ற 25ஆம் தேதிக்குள் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வழிகாட்டுதலை பின்பற்றி வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயராம் அவர்களின் முன்னிலையில் சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று சுகாதாரப் பணியாளர்களை வைத்து தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவைதவிர வத்திராயிருப்பு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி போடுவதற்கு வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

வத்திராயிருப்பு இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா பரவுதலை தடுக்க நகராட்சி சார்பில் பஸ் நிலையம் மற்றும் இருசக்கர வாகனம் ஆட்டோக்கள் பேருந்துகள் ஆகிய வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
.

Leave a Reply

Your email address will not be published.