Police Department News

மாஸ்க் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அபராதம் விதித்த போலீசார்

மாஸ்க் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அபராதம் விதித்த போலீசார்

மதுரை, உசிலம்பட்டி, பேரையூர் ரோட்டில் முக கவசம் அணிய மறுத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை உருவெடுத்து வேகமாக பரவும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக அரசு பல் வேறு முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசி்லம்பட்டி பேரையூர் ரோட்டில் சிறைக்காவலர்கள் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வந்தது, அப்போது அந்த வாகனத்தில் வந்த ஓட்டுனர், பெண் ஊழியர்கள் முக கவசம் அணியாததை கண்டு சிறைக்காவல் அதிகாரி செந்தில் அரசி 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்தார் தொடரந்து அவர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள் முக கவசம் வழங்கி அறிவுரை கூறினர், ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முக கவசத்தை அலட்சியமாக வாகனத்திலேயே வைத்தனர், அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் முக கவசம் அணிய மறுத்தனர் இதனால் கோபமடைந்த அதிகாரிகள் தொடர்ந்து அறிவுரை கூறியதையடுத்து ஒரு வழியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முக கவசம் அணிந்தனர்.

கொரோனா காலகட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மகத்தானது. ஆனால் நோய் தடுப்பு நடவடிக்கை விசயத்தில் அரசு ஊழியர்களை அறிவுரைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியது பொதுமக்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.