திருநெல்வேலி மாநகரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்கச்செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் இப்பணியினை வாகன ஓட்டிகள் பாராட்டி மனதார நன்றியினை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேஜஸ் போலீஸ் அகாடமி பாரட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு. எஸ் முத்தமிழ் செல்வன் பாராட்டு விழா கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பிடிஓ ஆபிஸ் பஸ்டாப் பகுதியில் உள்ளது, தேஜஸ் போலீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மைய அகாடமி. இந்த அகாடமி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம்,வேப்பூர், பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் களவு போனதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் டெல்டா பிரிவு SI நடராஜன் அவர்கள் தலைமையிலான போலீஸார் திருட்டு நடந்த பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து இரவு நேரங்களில் காரில் வந்து முன்கூட்டியே இடங்களை நோட்டமிட்டு குறி […]
ஒட்டன்சத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஓட்டி வந்த கார் விபத்து (19.07.2021) ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கசியம்மபட்டி பைபாஸ் சாலையில் கோயம்புத்தூர் பகுதியிலிருந்து ஓட்டிவந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்ந நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.