


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தேஜஸ் போலீஸ் அகாடமி பாரட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் காவல் ஆய்வாளர் திரு. எஸ் முத்தமிழ் செல்வன் பாராட்டு விழா கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பிடிஓ ஆபிஸ் பஸ்டாப் பகுதியில் உள்ளது, தேஜஸ் போலீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தனியார் பயிற்சி மைய அகாடமி. இந்த அகாடமி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்று, அரசு பணி செல்வோருக்கு, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தேஜஸ் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் கண்ணையன் தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியர் பெருமக்கள் முனிராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி மைய மாணவி ஜெயப்பிரியா விழாவில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் காவல் நிலைய, காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன், கலந்து கொண்டு, சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி செல்வோருக்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார், இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பயிற்சி மைய மாணாக்கர்கள் மற்றும் பயிற்சி மைய நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
