Police Department News

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா

செங்கம் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பிணி பெண் தர்ணா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாத கர்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்க வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம் மேல்முடியனூர் கிராமத்தை சேர்ந்த, வேலு என்பவரின் மகன் சிலம்பரசன் என்பவருக்கும், மேல் கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் மகள் சுந்தரி என்பவருக்கும் திருமணம் ஆகி 11 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலம்பரசனின் பெற்றோர்கள் தனது உறவினர்களுடன் வந்து சிலம்பரசனை அழைத்து சென்று விட்டனர். சுந்தரி 7 மாத கர்பணியாக உள்ளார். இவர் கடந்த 3 மாதங்களாக தன் சகோதரி வீட்டில் தங்கி வசித்து வந்தார் தனது கணவரை வெளியே அனுப்பாமல் அவரது உறவினர்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் 3 மாதமாக தவித்து வருவதாகவும் தன் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த வித பலனும் இல்லாததால் மனமுடைந்த சுந்தரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் துணை காண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள் சுந்தரியிடம் பேச்சு வார்த்தை நடத்தி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுந்தரி தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

கணவருடன் சேர்த்து வைக்க கோரி 7 மாத கர்பணி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.