


மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் பேப்பர் லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானா வில் விரகனூர் பகுதியில் இருந்து பழைய பேப்பர் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பார விதமாக விரனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் திரும்பிய போது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் தலைமையிலான சிலைமான் தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுற்றுச்சாலை சந்திப்பில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…
விரைந்து செயல்பட்டு மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, ரமேஷ் குமார்,, தங்கபாண்டி ஆகியோர் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி சீரான போக்குவரத்துக்கு வழி வகுத்தனர்
