மேலூர் பகுதியில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை, நான்கு நபர் கைது, 100 மது பாட்டில் பறிமுதல்,
மே தினம் மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பது தொடர்பாக இரண்டு நாட்கள் அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மதுபானக்கடை விடுமுறையை தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை பிடிப்பதற்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டதை அதை தொடர்ந்து மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 4 நபர்கள் கைது அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது முருகன் வயது 43 கொங்கம்பட்டி அவரிடம் இருந்த 25 மதுபாட்டில்கள் சிவகுமார் வயது 30 பெரும்பால பட்டி அவரிடமிருந்து 25 மதுபாட்டில்கள் அஜித் குமார் வயது 25 அவரிடம் இருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் பாபு வயது-30 அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் திரு. முருக ராஜா சார்பு ஆய்வாளர்,
திரு, பாலமுருகன் சார்பு ஆய்வாளர், மற்றும் கீழவளவு போலீசார்கள்