மதுரை, கீழசந்தை பேட்டை பகுதியில், கணவன்,மனைவி, குழந்தைகள் காணவில்லை, தெப்பக்குளம் போலீசார் விசாரணை
மதுரை மாநகர், கீழ சந்தைபேட்டை, காதர்கான் பட்லர் சந்தில் வசித்து வரும் அப்துல்ரசாக் மனைவி ஆபிதாபேகம் வயது 65/21, இவரது கணவர் அப்துல் ரசாக் அவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர் அனைவரும் திருமணம் முடித்து அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். தனது மகன் கமர்தீன் வயது 38/21, இவருக்கு திருமணமாகி சமீம்பானு வயது 33/21, என்ற மனைவியும் , அஞ்சும் உம்ரா என்ற பெண் குழந்தையும், முகமதுகுல்சந்த் என்ற ஆண் குழந்தையும், உள்ளனர். மேற்படி நபர்கள் அனைவரும் ஆபிதா பேகத்துடன் வசித்து வந்தனர். தனது மகன் கமர்தீன் G.B.Trading கம்பெனி என்ற பெயரில் தொழில் நடத்தி வந்த நிலையில் மேற்படி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அதனால் கடன் வாங்கி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 23 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆபிதாபேகம் கண் விழித்து பார்த்த போது வீட்டிலிருந்த தனது மகன் கமர்தீன், அவரது மனைவி சமீம்பானு, தனது பேரப்பிள்ளைகளான அஞ்சும் உம்ரா, முகமதுகுல்சந்த்,ஆகியோர்களை காணவில்லை தனது மகனின் செல் போனுக்குதொடர்பு கொண்ட போதும் செல் போன் ஸ்வீட் ஆப் செய்யப்பட்டிருந்தது. தனது மகன் குடும்பத்தை பற்றி அக்கம் பக்கம் விசாரித்தும் தனது உறவினர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தும் தனது மகன் குடும்பத்தைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை, எனவே மதுரை, தெப்பக்குளம் B3, காவல் நிலையத்தில் தனது மகன் குடும்பத்தை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர், புகாரை பெற்று கொண்ட தெப்பக்குளம் B3, காவல் நிலைய ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. வன்னியன் அவர்கள் வழக்கு பதிவு ஆய்வாளர் திரு .இளஞ்செழியன் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.