ஓட்டு எண்ணும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை 75 மையங்களில் நடக்கவுள்ளது. இந்த மையங்களில் 5622 துணை ராணுவ வீரர்கள் 5154 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 25 ஆயிரத்தி 59 போலீசார் என மொத்தம் 35 ஆயிரத்து 836 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மற்ற போலீசார் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.