மதுரை ஓப்புளா படித்துரை பகுதியில் சட்ட விரோதமாக மது பான விற்பனை செய்தவர் கைது, விளக்குத்தூண் B1, போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகர் விளக்குத்தூண் B1, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஓப்புளாபடித்துரை பகுதியில் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜான்ஸிராணி அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்புக்கான ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர் திரு ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்த போது சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருதவர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார் உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர் ராஜாக்கூரை சேர்ந்த ராஜசேகர் மகன் செல்வம் வயது 48/21, என தெரியவந்தது. அவர் கையில் வைத்திரிந்த பையில் 8 எண்ணம் கொண்ட Black Pearl 180 ML பாட்டில்கல் இருந்தன. அவரை விசாரித்த போது அவர் இனம் தெரியாத நபர்களிடமிருந்து வாங்கி அவைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததை அறிந்தும், அவர் குற்றத்தை ஒப்பு கொண்டதின் பேரில் அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.