மதுரையை சேர்ந்த வழிபறி கொள்ளையர்கள், மானாமதுரையில் கைவரிசையை காட்டிய போது சிக்கினர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சுற்று வட்டாரங்களில் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவந்த இரண்டு கொள்ளையர்களை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரையை சுற்றியுள்ள பகுதியான தாயமங்கலம், வேதியரேந்தல், சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் வழியில் தனியாக செல்பவர்களிடம் இரண்டு நபர்கள் தொடர்வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள் தாயமங்கலம், வேதியரேந்தல் பகுதிக்கு செல்லும் மக்களிடம் கைவரிசை காட்டிவந்தனர். சிவகங்கைக்கு தனியாக செல்லும் பெண்களிடமும் வழிபறியில் ஈடுபட்டனர். கொள்ளையர்களை பற்றி தகவல் காவல்துறையினருக்கு தெரிய வர மானாமதுரை துணை கண்காணிப்பாளர் திரு. சுந்தரமாணிக்கம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு ஆதிலிங்கம் போஸ் அவர்களின் தலைமையில், சிப்கார்ட் சார்பு ஆய்வாளர் திரு தாரிக் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர், திரு. நாகராஜன், பக்குரூதீன் மற்றும் போலீசார் மேலகொன்னாக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் இரண்டு நபர்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சரியான முறையில் விசாரிக்கவே மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மதுரையை சேர்ந்த பாலமுருகன் வயது 33/21, மற்றும் மாடசாமி வயது 36/21, என்பதும் இவர்கள் மானாமதுரை சுற்று வட்டாரத்தில் தொடர் வழிப் பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. கொள்ளையர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளும் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.