மதுரை கீழவளவு பகுதியில் கிராவல் மணல் கடத்திய வாலிபர் கைது, கீழவளவு போலீசார் அதிரடி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜாஅவர்கள் குற்றத்தடுப்பு மற்றும் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குழிச்சேவல் பஸ் நிறுத்தம் பின்புரம் உள்ள பள்ளம் அருகில் சிலர் திருட்டுத்தனமாக கிராவல் மண் அள்ளிக்கொண்டிருப்பதை கண்டனர். சார்பு ஆய்வாளர் அவர்கள் சக காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார், காவலர்களை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயற்சித்தனர். உடனே அவர்களை மடக்கி பிடித்தார், பிடிபட்டவரை விசாரித்ததில் அவர் அம்மன்கோவில்பட்டியை சேர்ந்த தங்கவேலு மகன் அஜித் வயது 25/21 என தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்து அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுக்க பயன்படுத்திய டிப்பர் லாரிகள் இரண்டையும், மற்றும் ஒரு JCB யையும் பறிமுதல் செய்தனர், ஆனால் தப்பியோடிய வாகன உரிமையாளர் கீழவளவை சேர்ந்த சசிக்குமார், வயது 38/21, மற்றும் மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிராவல் மண் திருட பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி இரண்டையும், JCB யையும் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட நபர் அஜீத் மீது சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.