
மாமன் மகளை பிளேடால் 13 இடங்களில் அறுத்து கொன்ற வாலிபர்.. சென்னையில் பரபரப்பு.
ஷோபானாவின் தொடை, இடுப்பு, கழுத்து பகுதிகளில் சதை பிய்ந்து தொங்கியது.. மாமன் மகளை பிளேடால் 13 இடங்களில் அறுத்தே கொன்றுள்ளார் அத்தை மகன் பாபு!
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி பூபதி – உஷா. இவர்களது மகள்கள் மெர்லின், ஷோபனா. மெர்லினுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. இந்நிலையில், பூபதி – உஷா இருவருமே சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால், பூபதியின் தங்கையான வேதவல்லிதான், ஷோபனாவை வளர்த்து வந்தார். ஷோபனாவுக்கு இப்போது வயது 13.
சற்று மனநிலையும் சரியில்லாமல் இருந்ததால், 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டார். அதனால் வேதவல்லி வீட்டிலேயே வைத்து சோபனாவை கவனித்து கொண்டார். இவர், ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிரியில் வேலை பார்க்கிறார்.
மெர்லின்
எதேச்சையாக தங்கையை பார்க்கலாம் என்று மெர்லின் கிளம்பி அத்தை வீட்டுக்கு வந்தார். அப்போது, ஷோபனா ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்து அலறி கத்தினார். உடனடியாக அத்தைக்கு போன் செய்து தகவலை சொல்லவும்,வேதவல்லியும் விரைந்து வந்தார். ஷோபனாவின் கழுத்து, கை, இடுப்பு, தொடை பகுதிகளில் சதைகள் கிழிந்து தொங்கி ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. உடம்பெல்லாம் பிளேடுகளை கொண்டு கிழிக்கப்பட்டு இருந்தன.
அக்கம் பக்கத்தினர் உதவியோடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ஷோபனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
உடனடியாக ஆதம்பாக்கம் போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட அவர்களும் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் வேதவல்லியின் மூத்த மகன் பாபு மீது சந்தேகம் எழுந்தது. பாபுக்கு 26 வயதாகிறது. இவர்தான் சம்பவம் நடந்த சமயத்தில், வீட்டிற்கு கடைசியாக வந்துவிட்டு சென்றதாகவும், அப்போது பாபு ஆவேசமாக இருந்ததை பார்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள். ஆனால் பாபுவை காணவில்லை.
ஷோபனாவை இவர்கள் 11 வருஷங்களாக வளர்த்து வருகிறார்கள். இது பாபுவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அம்மாவிடம் தகராறு செய்துகொண்டே இருந்துள்ளார். வீட்டை விற்று தனக்கு பணம் தரும்படியும் சண்டை போட்டு வந்துள்ளார். குடிப்பழக்கமும் உள்ளது.. இவர்கள் குடியிருக்கும் அந்த வீடு ஷோபனாவின் தந்தை வீடு என்றும் அதை பல முறை பாபு கைப்பற்ற பார்த்ததாகவும் தெரிகிறது.
பணம் கையில் இல்லாததால், வீட்டிற்கு வந்து பொருட்களை அள்ளி சென்று விற்க பாபு முயன்றிருக்கலாம் என்றும், அதனை ஷோபனா தடுத்ததால் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஈவு இரக்கமின்றி பிளேடால் கிட்டத்தட்ட 13 இடங்களில் அறுத்து உள்ளார் பாபு. தொடை பகுதியில் காயங்கள் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள் அதனால், ஷோபனா பலாத்காரம் செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர்