Police Department News

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்தை கள்ள மார்கட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயன்ற லேப் டெக்னிசியனை செல்லூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்

மதுரையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்க முயன்ற தனியார் மருத்துவ மனை லேப்டெக்னிசியனை செல்லூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கான மிக முக்கிய மருந்தாக ரெம்டெசிவர் உள்ளது. இந்த மருந்தானது தினமும் 83 பேருக்கு முன்னதாக டோக்கன் வழங்கி, ஒரு பாட்டில் ரூ. 1600/−விலையில் மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் வழங்குபவர்களுக்கே இந்த மருந்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் முறைகேடாக ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை செல்லூர் D2,காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கிடைத்த ஒரு செல் போன் எண்ணிற்கு செல்லூர் போலீசார் தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசியவர் மதுரை பைபாஸ் ரோட்டில் பாத்திமா கல்லூரி அருகே வந்தால் ஒரு பாட்டில் மருந்து ரூ. 28 ஆயிரத்திற்கு வழங்குவதாக தெரிவித்தார் இதை தொடர்ந்து செல்லூர் போலீசார் மப்டியில் அங்கு சென்றனர், அங்கு நின்றிருந்த 2 பேர் மருந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார் புரோக்கர் போல் செயல்பட்ட மற்றொருவர் தப்பிச் சென்றார். போலீசில் சிக்கிய இளைஞரை பிடித்து செல்லூர் காவல்நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் விசாரித்தார். இதில் அவர் மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்த, சுல்தான் அலாவதீன் மகன் இம்ரான்கான் வயது 24/21, என தெரிய வந்தது. இவர் செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் லேப் டெக்னிசியனாக வேலை பார்த்து வருகிறார் என தெரிய வந்தது. இம்ரான்கானிடமிருந்து 3 ரெம்டெசிலிர் மருந்து பாட்டில்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த மருந்து எப்படி கிடைத்தது என இம்ரான்கானிடம் விசாரித்த போது ஒரு டாக்டரின் போன் எண்ணில் பேசினேன், அவர் ஒரு நபர் மூலம் மருந்துக்களை தந்தார் டாக்டரை நேரில் பார்த்தது இல்லை என்றார். இம்ரான்கானை கைது செய்த செல்லூர் D2, காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் மருந்து விநியோகித்த டாக்டர் தப்பி சென்ற புரோக்கர் மற்றும் இந்த விற்பனையில் தொடர்புடையவர்கள் யார் என்ற விசாரணையை வேகப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.