Police Department News

உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது.

உவரி காவல் நிலைய பெண் ஆய்வாளரின் கற்பனையில் கொரானா விழிப்புணர்வு ஓவியம். பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இடம்பிடித்து அசத்துகிறது.

நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது
நாடார் உவரி. நாடார் உவரியில்உள்ள V6 காவல்நிலையத்தில் பெண் ஆய்வாளராக பணிபுரிகிறார் செல்வி. இவர் ஊரடங்கு உத்தரவு காலத்தில்உவரி சுயம்புலிங்க சுவாமிதிருக்கோவில், பரதர் உவரி கப்பல் மாதா மற்றும் அந்தோணியார் திருத்தலம் ,மற்றும் சாலையோர நடைபாதைஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்றோரை தேடி தேடி தனது காவல் நிலைய சகாக்களுடன் சேர்ந்து உணவு வழங்குவது , முகக் கவசம் அணியாதவர்களுக்கு அதை அணிவித்து விடுவது போன்ற அரும் பணியினை செய்து வருகிறார். தற்போது பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வையும், கோவிட்_ 19 நோய் குறித்த அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் கைதேர்ந்த ஓவிய நிபுணர்களைக் கொண்டு வரைந்துள்ள ஓவியம் பலரது செல்போன்களில் வாட்ஸ்அப் இடத்தை ஆக்கிரமித்து உள்ளது. பலர் இதனை படம்பிடித்து முக நூல்களில் தங்களது பக்கத்தில் பதிவிட்டு அது குறித்து தங்கள் மனதில் ஏற்படும் விழிப்புணர்வு வாசகங்களையும் பதிவிட்டுள்ளனர். இந்த கொரோனா விழிப்புணர்வு ஓவியம் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அருகிலுள்ள திருச்செந்தூர் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் குரோனோ வைரஸ் படமும் அதன் கீழ் மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மூடி இருப்பது போன்று முகக் கவசம் அணிந்த உருவமும் அந்த உருவத்தின் ஒரு கையில் சானிடைசர் பாட்டிலும்”அதனடியில்

வீட்டில் இருப்போம் கொரோனனாவை ஒழிப்பபோம்

உவரி காவல் நிலையம் வள்ளியூர் உட்கோட்டம் என எழுதப்பட்டுள்ளது. மக்கள் சேவை புரிந்து மனதில் நிற்கும் ஓவியம் வரைந்து காவியம் படைக்கும் உவரி காவல் நிலைய சகாக்களையும் பெண் ஆய்வாளர் செல்வியையும் மக்கள் மனதார பாராட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.