Police Department News

சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு விதியை மீறிய 1727 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி வெட்டியாய் ஊர் சுற்றிய 1727 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுபவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்ப்படும் என டி.ஜி.பி.,திரிபாதி நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் அதே போல வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் நேற்று 2079 வழக்குகள் பதிவு செய்தனர். வெட்டியாய் ஊர் சுற்றிய 1727 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். முககவசம் அணியாதது தொடர்பாக 1346 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 83, விதிகளை மீறி கடைகள் திறந்து வைத்திருந்தது தொடர்பாக 64 வழக்குகள், பதிவு செய்யப்பட்டன.

சென்னை முழுவதும் இன்று ட்ரோன் கேமரா வாயிலாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.