Police Department News

வாகன தணிக்கையின் போது கொரோனா விழிப்புணர்வு J7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமல் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

வாகன தணிக்கையின் போது கொரோனா விழிப்புணர்வு J7 வேளச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.விமல் ( சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

14.05.2021 J7 காவல் நிலைய ஆய்வாளர் திரு.விமல் தலைமையில் (சட்டம் ஒழுங்கு ) காவலர்கள் குழுவினருடன் வேளச்சேரி காந்திசாலை வாகன தணிக்கையில் இரண்டு சக்கர வாகனம் மூன்றுசக்கரவாகனம் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய நபர்களிடம் முககவசம் அணிந்து இருக்கிறார்களா என்றும் சாலையில் செல்வதற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா என்றும் பரிசோதனை செய்கின்றனர்.பின்னர் ஒரு குடும்பத்திற்கு உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக அன்பாகவும் அரசாங்க உத்தரவுபடியும் பல்வேறு அறிவுரைகளை கூறி மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.மற்றும் காவல்துறை சார்பாக குடிக்க தண்ணீரும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சாலையில் படுத்துகிடக்கும் நபர்களுக்கு உணவும் முழு ஊரடங்கை மீறி வரும் வாகனங்களுக்கு அரசாங்க உத்தரவுபடி அபராதம் விதித்தும். இப்படி இரவு பகல் பாராமல் கடும் வெயிலிலும் தங்களுடைய சந்தோஷத்தை இழந்து சரியான நேரத்தில் உணவு சாப்பிடமுடியாமல் சரியான நேரத்தில் உறங்காமல் மக்களுக்கு தங்களுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் J7 வேளச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் .திரு.விமல் (சட்டம் ஒழுங்கு) அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.