மதுரை தத்தனெரி பகுதியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை
மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி அசோக் நகர் 4 வது தெருவில் வசித்து வருபவர் முனியசாமி மனைவி அமுதா வயது 48/21, இவர் தன் குடும்பத்தாருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் முனியசாமி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயினால் இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகள் கனிமொழி இவருக்கு பிரபு என்பவருடன் திருமணமாகி அவர்கள் திருமங்கலத்தில் வசித்து வருகிறார்கள். அமுதா, தன் வீட்டின் முன்பு இட்லி, தோசை மாவு வியாபாரம் செய்து வருகிறார். இவரின் இன்னொரு மகள் வேல்விழி +2 படித்து முடித்து விட்டு B.A. கரசில் படித்துள்ளார்.இவர் மதுரை கீழவாசலில் உள்ள பழனியப்பா பாத்திரக்கடையில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.இவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் எனவே இவருக்கு வெகு நாட்களாக மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நடக்கவில்லை, இதனால் இவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார். கடந்த 13 ம் தேதியன்று மாலை இவரின் தாயார் அமுதா வீட்டடிற்கு பக்கத்தில் இட்லி தோசை மாவு விற்றுக் கொண்டிருந்தார் அப்போது, தன்னுடைய மூத்த மகள் கனிமொழியும் மருமகன் பிரபுவும் வந்து அமுதாவிடம் வீட்டின் உள் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதாகவும் நெடு நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்கள் உடனே அனைவரும் சென்று மீண்டும் கதவை தட்ட கதவு திறக்கப்படவில்லை எனவே வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது அங்கே தன்னுடைய இளைய மகள் வேல்விழி பேன் மாட்டும் கொண்டியில் தனக்கு தானே தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்தார் உடனே அவர்கள் சத்தம் போட அக்கம் பக்கத்திலிருப்போர்கள் ஓடி வந்து தூக்கிலிருந்த வேல்விழியை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருந்தார் உடனே இவரது தாயார் அமுதா, தன் மருமகன் பிரபுடன் செல்லூர் D2, காவல்நிலையம் வந்து தன் மகள் இறப்பில் தங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் சட்டப்படி விசாரணை செய்து மகளின் உடலை நல்லடக்கம் செய்ய உதவும்படி கேட்டு புகார் மனுவை கொடுத்தார், மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திருமதி. லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.