Police Department News

தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட மதுரை கீழமாசிவீதி பகுதி.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கீழமாசி வீதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போக்குவரத்து இன்றி தூங்கா நகர் என்று பெயர் பெற்ற மதுரை மாநகர் வெறிச்சோடி காணப்பட்டது.

நகரின் 30க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதுடன் ரோந்து பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர கால ஊர்தி தூய்மைப் பணியாளர்கள் ஊர்திகள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது இதே போன்று செவிலியர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன அரசின் கட்டுபாடுகளை மீறி சாலைகளில் ஆங்காங்கே சுற்றித் திரிபவர்கள் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் மேலும், அத்து மீறி தேவையின்றி சாலைகளில் வாகனங்களை ஓட்டி வருபவர்களை விளக்குத்தூண் காவல் உதவி ஆணையாளர் சூரக்குமார் அவர்கள் தலைையில் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கான மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மதுரைமாவட்ட காவல்துறை சார்பாகவும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாகவும் கேட்டு கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.