Police Department News

உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே…

விருதுநகர் மாவட்டம்:-

உயிர் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என அனைவருக்கும் தெரிந்ததே…

ஆனால் அதை பெரிதாக நினைக்காமல் நமக்கென்ன எனக்கென்ன என்று கொரோனா ஊரடங்கு நேரத்தில் அநாவசியமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.

அருப்புக்கோட்டை நகருக்குள் காலை 10 மணிக்கு மேல் சுற்றி திரிந்து கொண்டிருப்பவர்களை நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பிவருகிறார் அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்கள்.

சாலைகளில் செல்பவர்கள் நிறுத்தி விபரம் கேட்டறிந்தால் மருந்தகம் மற்றும் மருத்துவமனை என எதையாவது காரணத்தை சொல்லி கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

இந்த மாதிரியாக பல காரணங்கள் சொல்லிக்கொண்டு வலம்வரும் நபர்களை நிறுத்தி மேற்படி சோதனைகளை மேற்கொண்டார்.

மக்கள் பணியில் அரும்பணியாற்றி வரும் காவல் துறையின் பணி மகத்தான பணியாகும்.

சட்டம் நம் அனைவருக்கும் பொதுவானதுதான் அதை மீறி செயல்படுபவர்கள் இந்த கொரோனா காலத்தில் தண்டிக்க வேண்டியவர்களே.

ஏனென்றால் யாரோ ஒருவர் செய்கின்ற தவறால் நோய்தொற்றானது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடுகின்றது அதனால்தான் காவல் துறை பொதுமக்களை வெளியில் சுற்றுபவர்களை கண்டித்து அனுப்பும் உண்ணதமான பணியில் தன்னுயிரையும் கருதாது பொதுமக்கள் உயிரை காக்கின்ற பணியில் தொய்வில்லாமல் பணிகளை செய்துவருகின்றனர்.

காவல் துறையில் கொரோனாவினால் பலரும் உயிர் பிரிந்து சென்றாலும் களம் கண்டுவருவதும் வேதனை குறியதாகும்.

திருத்தம் மற்றும் திருந்துவது என்ற செயல் பொதுமக்கள் கையில்தான் உள்ளது அவர்கள் முழுமையாக மனமுவந்து தாமாக முன்வந்து ஒவ்வொருவரும் வெளியில் வரமாட்டோம் அத்தியாவசிய தேவைக்கு ஒருவர் மட்டுமே வெளியில் வருவோமென சபதமேற்கொண்டால் மட்டுமே இந்நிலை (கொரோனா) அடங்கும் அதுவரையில்… மக்கள் நலனில் காவதுறை பணிகள் தொடரும் பல நோய்தொற்றின் இன்னல்களுக்கும் நடுவில் மனம் தளராமல்…

Leave a Reply

Your email address will not be published.