மதுரை, சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. போலீசாரை பார்த்தவுடன் கொள்ளையர்கள் மோட்டார சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ராஜசுலோசனா அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இவர்கள் சோழவந்தான் அருகே இரும்பாடி பகுதியில் போலீசார் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் முன்பு மர்ம கும்பல் கேட்டை உடைத்துக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதைக் பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ரவிக்குமார்,அவர்கள சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம கும்பலை அவர்கள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக இதே கடையில் சுமார் 300-க்கும் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிடிபட்டனர்.