
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவலருக்கு பண உதவி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மதுரை மாவட்டம் மேலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வந்த முதல்நிலைக் காவலர் மோகனக்கண்ணன் என்பவர் கடந்த வாரம் மேலூர் காவல்நிலைய சரகம் கந்தப்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று மோகன கண்ணன் அவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள், மேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் நேரில் சென்று நலம் விசாரித்து அவரின் மருத்துவ செலவிற்கு மேலூர் உட்கோட்ட காவலர்கள் அளித்த உதவித் தொகையான 1,25,000/− ரூபாயை காவலரின் மனைவி அவர்களிடம் வழங்கினார்கள்.
