மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க சொல்லி திருப்பி அனுப்பும் காவல்துறையினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்கின்றனர். இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆறு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் அத்தியாவசியமின்றி செல்லும் பொது மக்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு இ பதிவு மற்றும் மற்றும் அலுவலக அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்களை தடுத்து நிறுத்தி காவல் உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் கொரோனா காலங்களில் வெளியில் ஊர் சுற்ற மாட்டேன் மற்றும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்து அதன் பின் அவர்களை திருப்பி அனுப்பினர்.
தேவையில்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அபராத தொகை விதிக்காமல் அவர்களுக்கு அறிவுரை கூறி உறுதிமொழியுடன் திருப்பி அனுப்பம் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டினர்.