நூதன முறையில் மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல் .
18/05/2021 அன்று அதிகாலையில் 7.00 Am . மணிக்கு ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய ஆய்வாலர் ஐயா திரு.பொம்மைய்யா சாமி காவல் ஆய்வாளர் அவர்களின் தலமையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் துகார் கோட்டைக்கரை ஆற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த tractor மற்றும் புக்குலத்தை சேர்ந்த இராமய்யா மகன் ஓட்டுநர் இரகுபதி என்பவரை கைது செய்தனர்.
தமிழகத்தின் இயற்கை வளக்கொள்ளையில் மிக முக்கியமானது ஆற்று மணல் கொள்ளை. மிக மிக அதிக லாபம் இருப்பதால், மணல் அள்ளுவதைத் தடுக்கும் காவல் மற்றும் வருவாய்த்துறையினரைக் கொலை செய்யக்கூட தயங்குவதில்லை மணல் கொள்ளையர்கள்.
ஒரு லோடு மணல் 30 முதல் 50 ஆயிரம் வரையில் விற்கப்படுவதால், ஊரடங்கைப் பயன்படுத்தி திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.
சரக்கு வாகனங்களுக்குத் தடை கிடையாது என்பதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவர்கள். அதில் ஓரிருவர் மட்டுமே சிக்கியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் , ஆர்.ஸ்.மங்கலம் பகுதி போலீஸ் இ நியூஸ் செய்தியாலர் K.ஹரிஹரன்