தூத்துக்குடி, மந்திகுளம் பகுதில் பணத்திற்காக, சீட்டு வைத்து சூதாடிய நபர்கள் கைது
விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மந்திக்குளம் கருப்பசாமி கோவில் அருகே உதவி ஆய்வாளர் திரு. தேவராஜ் தலைமையிலான போலிசார் ரோந்து சென்றபோது, அங்கே ஊரடங்கு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பணத்திற்காக சீட்டு வைத்து கொண்டிருந்த மந்திக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராமர் (53), பாலசுப்பிரமணியன் மகன் கணேசன் (31), ஆறுமுகம் மகன் முனியசாமி (52), சோலையப்பன் மகன் பெருமாள் (51) மற்றும் குமராண்டி மகன் ராமசாமி (59) ஆகியோர் சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 500/-யும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து விளாத்திக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.